--- --:--:-- --

முருக பக்தர்கள் மாநாடு – தென்னக ரயில்வே சிறப்பு ஏற்பாடு

4

முருகனுக்கு உகந்த கிருத்திகை திருநாளாம் வரும் ஜூன்.22-ம் தேதி முருக பக்தர்கள் சார்பாக மதுரை மாநகரில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் பேச்சு இருக்காது.

 

இந்த மாநாட்டில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்- மந்திரி யோகி ஆதித்திய நாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, சீமான், உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

 

கலைத் துறையினர், பிற அமைப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், முருக பக்தர்கள் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வரும் 21ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் மறுமார்க்கத்தில் 22ஆம் தேதி நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon