--- --:--:-- --

பெண்ணிடம் அத்துமீறல்.. அரசு பேருந்தில் வாலிபரின் சேட்டை..போலீஸ் கண்காணிப்பில் அசட்டை..!

1

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன்  அரசு பேருந்தில் மதுரைக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பேருந்தில் பயணித்த சக பயணி ஒருவர், அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

அந்த பஸ்சில் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் , பஸ்  புறப்பட்ட சிறிது நேரத்தில் பெண் பயணியிடம்  அதன் அருகில் நின்று பயணித்த வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

முதலில் எச்சரித்த அந்த பெண், தொடர்ந்து இளைஞர் அத்துமீறலில் ஈடுபட்டதால் பேருந்தில் நடத்துனரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் அந்த நபரை பிடித்து தாக்க துவங்கியுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து அந்த நபரை மீட்ட நடத்துனர்  எச்சரித்து அனுப்பி வைத்தார்.

 

ஓடும் பேருந்தில்  பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் அடங்காத ரோமியோக்களை அடக்க  அரசு பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்தி , கண்காணித்து தண்டிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon