அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் ராமநாதபுரம் மாவட்ட ஆதரவாளர்கள், அவர் அணியில் இருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்தனர்.
சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்துக்கு சென்று அவர் முன்னிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களான நாகராஜன், அரிகிருஷ்ணன், மகாலிங்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் சேர்ந்தனர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




