காலை உணவுத் திட்டத்தின்கீழ் 22 லட்சம் குழந்தைகள் பயன்
காலை உணவுத் திட்டத்தின்கீழ் 22 லட்சம் குழந்தைகள் பயன் அடைவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு மணிமேகலை விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், பெண்களுக்காக திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களை பட்டியலிட்டார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 1-5ம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் பயனடைவதாக அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




