திமுக, பாஜகவுடன் தவெக கூட்டணி அமைக்காது என, அக்கட்சியின் தேர்தல் மேலாண் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தேர்தல்களில் தோல்வியுறும் அதிமுகவுடன் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய அவர், தவெக தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியா என்பது குறித்து டிசம்பரில் தெரிவிப்போம் என்றார். தவெக, ஆரம்பம் முதலே அதிமுகவை விமர்சிக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.