திமுக, அதிமுக இடையே மட்டுமே போட்டி: திருமாவளவன்
2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை அணிகள் இருந்தாலும் திமுக -அதிமுக அணிகள் இடையே தான் நேரடி போட்டி என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிலும், மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணியே வெற்றியை பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக கூட்டணிக்கு யார் தலைமை என இன்னும் தெளிவாக தெரியவில்லை எனவும் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




