--- --:--:-- --

இன்ஸ்டாவில் தொடங்கிய காதல்.. கல்யாணம் முடிந்த ஐந்து நாளில் கசந்த சோகம்..!

8

கிருஷ்ணகிரி அருகே instagram மூலம் பழகி இளம்பெண்ணை திருமணம் செய்த ராணுவ வீரர் தேனிலவு முடிந்ததும் அந்த பெண்ணை அவரின் வீட்டில் விட்டு செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காவேரிப்பட்டணம் பத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் இன்ஸ்டாகிராமில் ஓராண்டாக பழகி வந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஏலகிரியில் உள்ள கோயிலில் இருவரும் திருமணம் செய்து ஊட்டிக்கு தேனிலவு செய்துள்ளனர்.

 

நான்கு நாள் தேனிலவு முடிந்த நிலையில் ஐந்தாம் நாள் அந்த பெண்ணுடன் வாழ மறுத்து அவரின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது இளைஞர், பெண் வீட்டார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon