ஐந்து சிறுநீரகங்களுடன் வாழும் நபர்..!
ஹரியானா மாநிலத்தில் தேவேந்திரன் என்ற 47 வயது நபர் ஐந்து சிறுநீரகங்களுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் தேவேந்தரனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
அந்த அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததால் மேலும் மூன்று பொருத்தப்பட்டது. அந்த முயற்சியும் தோல்வி அடைந்ததால் தற்பொழுது மேலும் ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இவர் ஐந்து சிறுநீரகங்களுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐந்தாவது சிறுநீரகத்தை பொருத்துவது சிக்கலாக 4 மணி நேர அறுவை சிகிச்சை கடந்த மாதம் நடைபெற்றது. ஐந்தாவது சிறுநீரகத்தை பொருத்த உடலில் இடமே இல்லாத நிலையில் மிகவும் போராடி பொருத்தியதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்தார்.
எனினும் செயல்படாத நான்கு சிறுநீரகங்கள் உடலுக்குள் இருப்பது மருத்துவ ரீதியாக பாதிப்பு என்பதால் நவீன சிகிச்சைகளை அளிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





