--- --:--:-- --

தங்கையை பற்றி ஆபாசமாக பேசியதால் இருவர் கொலை..!

4

ங்கையை பற்றி ஆபாசமாக பேசிய காரணத்தால் நண்பர்கள் இருவரை அடித்து கொலை செய்த சகோதரன், இருவரின் உடலையும் பள்ளத்தில் போட்டு அதில் ஒரு லாரி மண்ணைக் கொட்டிய சம்பவம் கடலூரை உலுக்கியுள்ளது.

 

கடலூரைச் சேர்ந்த அன்புராஜ் மற்றும் சரண்ராஜ் ஆகிய இருவரும் காணாமல் போனதாக அடுத்தடுத்து சில நாட்களில் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இறந்தவர்களின் செல்போன் தரவுகளை ஆய்வு செய்த பொழுது அவர்கள் குவாரி ஓட்டுநர் பால்ராஜ் என்பவரிடம் பேசியது தெரியவந்தது.

 

அவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்த பொழுது வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கடந்த மாதம் 22ஆம் தேதி பூமங்கலம் என்எல்சி சுரங்க உபரி மண் மீது அருண்ராஜ், சரண்ராஜ், பால்ராஜ் மற்றும் அன்புராஜ் நண்பர்கள் சேர்ந்து மது அருந்துள்ளனர்.

 

அப்பொழுது போதையில் இருந்த அன்புராஜ், பால்ராஜ் சகோதரியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிற.து இதனால் ஆத்திரமடைந்த பால்ராஜ் இரும்பு கம்பியை கொண்டு அன்புராஜையும் தடுக்க வந்த சரண்ராஜையும் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

நிகழ்விடத்தில் விருத்தாச்சலம் வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் உடல்கள் மீட்கப்பட்டு கூராய்வு செய்யப்பட்டது. கொலை சம்பவம் தொடர்பாக பால்ராஜ் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது நண்பர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon