தலைமை ஆசிரியரை மிரட்டிய பள்ளி மாணவன்..!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் தலைமை ஆசிரியரை மாணவன் ஒருவன் விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் விதியை மீறி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்துள்ளான். இதையடுத்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து தலைமை ஆசிரியர் விசாரித்துள்ளார்.
அப்பொழுது இந்த மாணவன் தலைமை ஆசிரியரிடம் விரல் நீட்டி மிரட்டும் வகையில் பேசி உள்ளார். செல்போனை கொடுக்காவிட்டால் கொன்று விடுவேன் என கூறி மாணவன் விரட்டிய காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





