ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்குகள்..!
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு செய்வதாக கூடுதல் மனுவை தாக்கல் செய்த அவர்கள், அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
அதை கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமனத்திலும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்திலும் கடந்த ஆண்டு நிலையே தொடர்கிறதா? எனக் கேள்வி எழுப்பினர்.அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆளுநர் நிலைபாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அதே நிலை தொடர்கிறது எனவும் தெரிவித்தனர்.
அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக கூறினர்.அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், பிரச்னை தீர்க்கப்பட்டால் நல்லது, இல்லையென்றால் தாங்களே தீர்க்க முயற்சிப்போம் என்று தெரிவித்து இறுதி விசாரணைக்காக தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




