தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கடற்கரையில் கடல் அரிப்பை தடுப்பது தொடர்பாக சென்னை ஐஐடி குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக கோயில் முன்பு உலக கரையில் அதிக அளவில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாறைகள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் வெளியேறுவதால் கடலில் நீராட பக்தர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில் கடற்கரையில் இருந்து கடல் அரிப்பு குறித்து சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்தனர். தரைமட்டத்திலிருந்து எந்த அளவிற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு கடல் மண் சரிவு ஏற்பட்டுள்ளது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.