ரசிகர்களுக்கு நேரில் புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினி
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு காத்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ரஜினி ரசிகர்கள் அவரது வீட்டின் முன் திரண்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை ரஜினி தனது வீட்டிலிருந்து வெளியே வந்து ரசிகர்களை கரம் கூப்பி வணங்கி, கையசைத்து வாழ்த்துத் தெரிவித்தார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




