பிரபல மலையாள மற்றும் திரைப்பட சின்னத்திரை நடிகர் ஆன திலீப் ஷங்கர் தனியார் ஹோட்டலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சின்னத்திரை படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரத்தில் தங்கி இருந்தவர் இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்க முடியாததால் ஹோட்டலுக்கு சென்று அவர் பார்த்த பொழுது சடலமாக இருந்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இருப்பது தெரியவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.