--- --:--:-- --

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த  ஆய்வு கூட்டம்..!

12

பல்வேறு அரசு துறைகளின் சார்பில்ரூ 311  கோடியே  25 லட்சம் மதிப்பில்  நலத்திட்ட உதவிகளை  தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (19.12.2024) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பல்வேறுஅரசு துறைகளின் சார்பில் ரூ. 51.32 கோடி செலவில் முடிவுற்ற 38  திட்டப்பணிகளை திறந்து வைத்தும் , ரூ.250.48 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டியும், 300 பயனாளிகளுக்கு ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்டஉதவிகளையும்  வழங்கினார்.

 

தொடர்ந்து  நிகழ்ச்சியில்  தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்சிறப்புரை   அவர் பேசியதாவது :இன்றைய தினம் உங்களையெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிகுந்தமகிழ்ச்சி. .உங்கள் முகத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சி தெரிகிறது. ஏன் என்றால்,மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 200சகோதரிகளுக்கு இன்றைக்கு கடனுதவிகள்வழங்கப்பட்டிருக்கிறது.

 

அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அதேபோல்,வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.அதுமட்டுமல்லாமல், பல்வேறு முடிவுற்ற பணிகள் தொடங்கி வைத்திருக்கிறேன்.பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்திருக்கிறேன்.  நம்முடைய அரசு திராவிட மாடல்அரசு.

 

நம்முடைய முதலமைச்சர் அரசு என்றைக்கும் மக்களுக்கானஅரசாகும். உங்களுக்காக, குறிப்பாக தாய்மார்களுக்கான, பெண்களுக்கான அரசாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதுஉங்களுக்கே தெரியும். ஏனென்றால், முதல்வர் ஸ்டாலின்,முதலமைச்சராக பொறுப்பேற்று போட்ட முதல் கையெழுத்தேஉங்களுக்கான கையெழுத்து தான். அது தான் மகளிருக்கான விடியல்பயணத் திட்டம்.

 

இன்னும்சொல்லப்போனால் அந்தத் திட்டத்தின் மூலமாக இதுவரைக்கும் கிட்டத்தட்ட 600கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருமகளிரும் அந்த திட்டத்தின் மூலம் மாதம் 900 முதல் 1000 ரூபாய் வரை சேமிக்கிறார்கள். இப்படி பல்வேறுத் திட்டங்கள் தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி மற்றும் எல்லாவற்றிற்கும்முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.

அதுவும் உங்களுக்கு தெரியும். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை ஒவ்வொரு மாதமும் 1கோடியே 16 லட்சம் மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் அரசு தான் நம்முடைய திராவிட மாடல் அரசு.இந்த கடன் இணைப்பை எல்லாம், நம்முடையமுதலமைச்சர் கடனாக பார்க்கவில்லை. உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாக தான்பார்க்கிறார்.

 

எனவே, நீங்கள் நன்றாக சிறப்பாக பணியாற்றி,நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால்,நீங்கள் இன்னும் 10 பேருக்கு வேலைக் கொடுக்கும் அளவிற்கு முன்னேற வேண்டும். வந்திருக்கக்கூடிய அனைத்து தாய்மார்களுக்கும்என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று பேசினார்.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.17.70 கோடி மதிப்பீட்டிலான 3பணிகள், தாட்கோ சார்பில் ரூ.2.05 கோடி மதிப்பீட்டிலான 2 பணிகள், மாநகராட்சி சார்பில்ரூ.192.95 கோடி மதிப்பீட்டிலான ஒரு  பணி,நகராட்சிகள் சார்பில் ரூ.16.27 கோடி மதிப்பீட்டிலான3 பணிகள், நெடுஞ்சாலைத்துறை (ஊரக சாலைகள்) சார்பில் ரூ.21.51 கோடி மதிப்பீட்டிலான 10 பணிகள் என மொத்தம் ரூ.250.48கோடி மதிப்பீட்டிலான 19  புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.மேலும், மாநகராட்சி சார்பில் ரூ.38.91 கோடி மதிப்பீட்டிலான 11 பணிகள், பேரூராட்சிகள் சார்பில் ரூ.7.97 லட்சம் மதிப்பீட்டிலான3 பணிகள், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.6.33கோடி மதிப்பீட்டிலான 14 பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டிலான2 பணிகள், சுகாதார பணிகள் துறையின் சார்பில் ரூ.2.06கோடி மதிப்பீட்டிலான 6 பணிகள், உயர் கல்வித் துறையின் சார்பில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டிலான ஒரு  பணி, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.59.00லட்சம் மதிப்பீட்டிலான ஒரு  பணி என மொத்தம் ரூ.51.32கோடி மதிப்பீட்டிலான 38 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

தொடர்ந்து, வருவாய் துறையின் சார்பில் 100 பயனாளிக்கு ரூ.47.46லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும் ,ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10 பயனாளிக்கு ரூ.35.00லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டம் சார்பில் 15மகளிர் சுயஉதவிக்குழு களைச் சேர்ந்த 150 பயனாளிகளுக்கு ரூ.8.07 கோடி கடனுதவிகளையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிக்கு ரூ.66,900/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிக்கு ரூ.45,306/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், தாட்கோ சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.53.75 லட்சம் மானிய உதவிகள்  என மொத்தம்300 பயனாளிகளுக்கு ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை  துணை முதல்வர் .உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்,தமிழக தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழகமனிதவள மேலாண்மைத் துறைஅமைச்சர் என். கயல்விழிசெல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன் (திருப்பூர்), கே.இ. பிரகாஷ் (ஈரோடு), திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் .க.செல்வராஜ்,  திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர்கலந்துகொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon