இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்..!
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மைக் செட் கடை நடத்தி வருபவர் நடராஜ்.
இவர் ஐயமடம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கார் அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நடராஜ் படுகாயம் அடைந்தார். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




