--- --:--:-- --

புதுச்சேரியை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார் – நாராயணசாமி

4

புதுச்சேரிக்கு பெஞ்சல் புயல் நிவாரணைம் வழங்காமல் பிரதமர் நரேந்திர மோடி புறக்கணிப்பதால் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். பெஞ்சல் புயல் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் சந்தித்து மனு அளித்தனர்.

 

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா பத்தாயிரம் ரூபாய், விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 50,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சரிடம் பிரதமர் விசாரிக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

 

புயல் நிவாரண பதிவுகளை புதுச்சேரி அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என்று நாராயணசாமி குற்றசாட்டை தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon