மழை வெள்ளத்தில் மிதந்த ஸ்விகி ஊழியர் சடலம்!
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் ஸ்விகி ஊழியர் சடலம் வெள்ளத்தில் மிதந்தது. இவர் யார்? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஃபெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாது பெய்த கனமழையால், நகரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
அங்கு பெரும் இயற்கை பேரிடரையும் ஏற்படுத்தியுள்ளது. ஈசிஆர், விழுப்புரம் சாலை, கடலூர் சாலை என முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




