புதுச்சேரி காமராஜர் சாலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அந்த பெண்ணின் செயினை பறித்து சென்றனர்.
இதனால் அந்த பெண்ணும் அவரது கணவரும் சாலையில் விழும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்பொழுது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பெரியகடை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.