சிங்கப்பெருமாள் கோயில் அருகே லாரிக்கு அடியில் பதுங்கி இருந்தவரை போலீசார் மீட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கப்பெருமாள் கோவிலில் சாலையோரங்களில் லாரிகள் மற்றும் தனியார் கம்பெனி பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.
இங்குள்ள வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடப்படுவது தொடர் கதையாகியுள்ளது. இந்த நிலையில் வளரி பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடையில் ஒருவர் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் மீட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.