திண்டுக்கல்லில் பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படாததால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் குண்டும் குழியுமான சாலையில் தேங்கி இருந்த நீரில் குளித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பாரப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லட்சுமணப்பட்டி பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பத்தாண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
சாலையை சீரமைத்து தரக்கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதன் ஆத்திரமடைந்த கிராமத்தினர் குண்டும் குழியுமான சாலையில் தேங்கி நீரில் குளித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். சோப்பு போட்டு குளித்து நூதன முறையில் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.