ஈரோட்டில் இலவச பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என மக்கள் குற்றச்சாட்டு..!
ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் பல இடங்களில் இலவச பேருந்து குறித்த இடத்தில் பஸ்சை நிறுத்தாமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்கள் குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தில் அரசு இலவச பேருந்துகள் மாலை நேரங்களில் நிற்பதில்லை என்றும், அப்படி ஒரு சில பேருந்து நிற்கும் பட்சத்தில் மகளிர்களும் பள்ளி மாணவர்களும் இலவச பேருந்து ஏறும் முன் மிக அவசரமாக வண்டியை எடுத்து செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அப்படி அவசரமாக எடுக்கும் பட்சத்தில் பல சமயம் மகளிர் பள்ளி மாணவிகள் தவறி கீழே விழுகிறார்கள். அப்படி விழும் பட்சத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது என்று மகளிர் மற்றும் பள்ளி மாணவிகள் பொதுமக்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதனால் மிகவும் அவதிக்கு உள்ளாவதாக தெரிவித்தார்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிற்காமல் செல்லும் அவசர அவசரமாக எடுக்கும் இலவச பேருந்து ஓட்டுனர் நடத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




