துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள்..அம்மாபாளையம் நகராட்சி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி..!

மிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

 

பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் நா. குமார் தனது சொந்த செலவில் 810 மாணவ மாணவிகளுக்கு லட்டுகள் வழங்கி வழங்கினார்.

முன்னதாக மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்து மலர் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பூண்டி நகர செயலாளர் மூர்த்தி, துணை செயலாளர் தேஜாஸ் மூர்த்தி, மாவட்ட துணை அமைப்பாளர் லிங்கேஸ்வரன், மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரி, கவுன்சிலர் டாக்டர் ராஜன், செயலாளர்கள் கமலக்கண்ணன், சக்திவேல், சிவஞானம், லோகநாதன் உட்பட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.