--- --:--:-- --

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதலமைச்சர்

1

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய குறு, சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

 

அவர் எழுதியுள்ள கடிதத்தில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது என்றும், கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

 

சாதி, குடும்பத் தொழில் வேறுபாடின்றி புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி திட்டத்தை ஆராய தமிழ்நாடு அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு விரிவான ஆய்வு செய்யப்பட்டது என்றும், திட்டத்தில் மாற்றம் செய்திட பரிந்துரைத்துள்ளதாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால், மத்திய அரசு அளித்த பதிலில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon