ஈரோடு மாவட்டத்தில் மேட்டூர் செல்லும் சாலையில் திடீர் பள்ளம்..
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அம்மா பேட்டை கோம்பூர் ஸ்ரீ விநாயகா பேக்கரி அருகே பவானி டு மேட்டூர் செல்லும் சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் தினந்தோறும் இந்த சாலை வழியாக மிதிவண்டியில் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தை கவனிக்காத பலர் ரோட்டில் விழுந்து காயங்களுடன் குறித்த நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல இயலாமலும் வேலைக்குச் செல்லும் மற்றும் ஊருக்குச் செல்லும் பலர் அடிபட்டு மீண்டும் வீட்டுக்கு செல்கிறார்கள்.
இதனால் உயிர் சேதம் ஏற்படும் முன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலை துறையை பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





