விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து படைத்த கின்னஸ் சாதனையை தானே முறியடித்து இருக்கிறார்.
அருள்குமார் என்ற அந்த இளைஞர் கின்னஸ் சாதனை படைக்கும் ஆர்வத்தில் ஒரு கையை மட்டும் தரையில் ஊன்றியபடி எப்படி தலைகீழாக நின்றபடியே தண்ணீர் குடிக்க பயிற்சி எடுத்தார். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் தலைகீழாக நின்றபடி 26 நொடிகளில் ஒரு லிட்டர் தண்ணீரை குடித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் தலைகீழாக நின்றபடி 25 நொடிகளில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்திருக்கிறார். அருண்குமாரின் இந்த இரண்டு முயற்சிகளையும் சாதனைகளாக ஏற்றுக் கொண்ட கின்னஸ் சாதனை புத்தக நிறுவனம் அவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.