அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு அமைப்பின் பதவி ஏற்பு விழா..!
ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம் மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில் அம் மாணவர்களின் சிறப்பான பங்களிப்பும் காரணமாக அமைகிறது.
இம் மாணவர்களின் குழுவானது, குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு,கற்றல் திறன் மேம்பாடு, மாணவர்களின் ஊக்கம் மற்றும் பங்களிப்பை அதிகரித்தல், மாணவர்களின் விடுப்பு எடுப்பதை குறைத்தல், ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவித்தல், அனைத்து மாணவர்களுக்குமான வாய்ப்புகள், நேர்மறை நடத்தைகளை வலுவூட்டுதல், தலைமைத்துவ பண்பை வளர்த்தல், ஆசிரியர் – மாணவர் உறவை மேம்படுத்துதல் ஆகியவைதான் மாணவர் குழு அமைப்பின் முதன்மை நோக்கங்களாக கொண்டு செயல்பட உள்ளது.

மேலும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அப்பால், சமூக உணர்வை ஊக்குவிப்பதற்கும், குழு பணியை வளர்ப்பதற்கும், பல்வேறு கல்வி மற்றும் கல்வி சாரா இணை செயல்பாடுகள் மூலம் மாணவர் தலைமையை ஊக்குவிப்பதற்கும் ஏதுவாக இக்குழு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில் மகிழ் முற்றம் என்ற பெயரில் மாணவர்கள் குழு அமைப்பை ஏற்படுத்தி அதன் குழுக்களாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து செயல்பட பள்ளி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு அமைப்பின் பதவி ஏற்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார்.
பட்டதாரி ஆசிரியர் முத்துக்குமார் மாணவர்கள் குழு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிமுகம் செய்து, விளக்கி பேசினார்.
இதனை தொடர்ந்து மாணவர் குழு அமைப்பு தேர்வு நடத்தப்பட்டது.

இதில் பள்ளியின் 5 குழுக்களின் ஒட்டு மொத்த பொறுப்பாசிரியராக இடைநிலை ஆசிரியை ஹெலன் செல்வியும், மாணவர் தலைவராக ஹரி மிதிலேஷ், மாணவி தலைவியாக தனிஷ்காவும் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து 8 வது வகுப்பு மாணவர்களான பபிதா (குறிஞ்சி)
திருமுகில்வன் (முல்லை), சம்வர்திகா (மருதம்), தாரிகாஸ்ரீ (நெய்தல்),
லக்ஷனா (பாலை) ஆகியோரும், இவர்களுக்கு குழு பொறுப்பாசிரியர்களாக சிவநடராஜ பிரபு (குறிஞ்சி), தேசம்மாள் (முல்லை),
செந்தாமரை செல்வி (மருதம்), பூமா (நெய்தல்), சாரதா பிந்து (பாலை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர். இடைநிலை ஆசிரியை ஹெலன் செல்வி மாணவர் குழு தலைவர்களுக்கு பதவி ஏற்க வைத்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாணவர் குழு தலைவர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
இதனைத் தொடர்ந்து மாணவர் குழு தலைவர்களில் மதிப்பீட்டு பலகையை பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி திறந்து வைத்தார். முடிவில் பள்ளி மாணவி லக்ஷனா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு துணைத்தலைவர் விஜயலட்சுமி, வளர்மதி, பாரதி, செல்வ புவனேஸ்வரி, மற்றொரு புவனேஸ்வரி, கார்த்திகா, தனலட்சுமி, சுதா, ஞான சௌந்தர்யா, கிர்த்திகா, மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாஸ்கர சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.





