தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்..!
தீபாவளி தேதியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரலில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும்.
அதிவிரைவு சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக போத்தனூர் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக கோவையில் இருந்து வரும் 31 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் இரவு 12:15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





