--- --:--:-- --

முடி திருத்தும் தொழிலாளியுடன் உரையாடிய வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி..!

2

நாட்டில் உயர்ந்து வரும் பண வீக்கம் மற்றும் வீழ்ச்சி அடையும் வருமானம் உள்ளிட்டவற்றால் ஏழை மக்கள் தரவு கொள்ளை அடிக்கப்படுவதாக ராகுல் காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி உத்தமநகர் பகுதியில் செயல்படும் சலூன் கடைக்கு சென்று சிகை அலங்காரம் செய்யும் வீடியோவை தனது பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில் முடி திருத்தம் செய்யும் தொழிலாளி அஜித் என்பவரை கட்டி அணைத்து உரையாடிய ராகுல் காந்தி அவரது இன்னல்களை கேட்டிருக்கிறார். கண்ணீர் மல்க தனது கஷ்டங்களை அந்த தொழிலாளி கூறும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

 

வீடியோ வெளியிட்டுள்ள அந்த பதிவில் முடி திருத்தம் செய்பவர் முதல் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வரை குயவர்கள் முதல் தச்சர்கள் வரை அனைவரின் கனவுகளும் நாட்டின் பணவீக்கம் மற்றும் வருமானம் வீழ்ச்சி அடைந்திருப்பதால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். சொந்தமாக வீடு கடை வாங்கும் கனவு மற்றும் சுயமரியாதை ஆகியவற்றை பறிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon