சிக்கன் குருமாவில் பல்..ஊழியர் தகவல்..!
சேலம் ஐந்து ரோட்டில் உள்ள அசோக் ஹோட்டலில் புரோட்டாவிற்கு வழங்கப்பட்ட சிக்கன் குருமாவில் மனித பல் கிடந்ததாக ஆட்டோ ஓட்டுனர் நாகராஜன் என்பவர் உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் சாப்பிடும் பொழுது கோவையை சேர்ந்த முதியவர் ஒருவரின் பல் விழுந்ததாகவும் அதனை நாகராஜன் எடுத்து வைத்துக்கொண்ட மிரட்டுவதாக ஹோட்டல் ஊழியர் ராமசுப்பு தெரிவித்தார். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறையினர் நேரடியாக ஆய்வு நடத்தி பல் மற்றும் குருமா மாதிரியை எடுத்துச் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





