காவலர் வீர வணக்க நாள்..துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை..!
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு நேற்று காலை 07.00 மணிக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்பூர் மாநகர காவல ஆணையர் சு.லட்சுமி தலைமையில் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் உயிர்நீத்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றி உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினரை வரவழைத்து நீத்தார் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர துணை ஆணையர்கள், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி, திருப்பூர் மாநகர காவல் உதவி ஆணையர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




