திருப்பூர் அடுத்துள்ள ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மின் அலுவலகம் மாற்றம்..!
திருப்பூர் அடுத்துள்ள ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ். பெரியபாளையத்தில் மின் அலுவலகம் அங்குள்ள பேங்க் ஆப் பரோடா அலுவலகத்திற்கு பின்னே வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது.
இந்த நிலையில் எஸ். பெரியபாளையம் அரசு நடுநிலை பள்ளி பின்புறம் உள்ள கட்டிடத்திற்கு மின் அலுவலகம் மாற்றப்பட்டு அதன் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு எஸ். பெரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மின் செயற்பொறியாளர் சந்திரசேகர் வரவேற்றார்.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஈஸ்வரமூர்த்தி மின் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஏ. பெரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, மின் செயற்பொறியாளர்கள் செந்தாமரைக் கண்ணன், சாமிக்கண்ணு எஸ். கணேசன், எஸ். பெரியபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





