--- --:--:-- --

கோயில் திருவிழாவுக்கு சென்ற பொழுது நிகழ்ந்த சோகம்..!

3

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடலில் குளிக்க சென்ற பொழுது அலையில் சிக்கி கல்லூரி மாணவி உட்பட இருவர் உயிரிழந்தனர்.

 

மதுரையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சொந்த ஊரான பெரியசாமிபுரம் கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது கடலில் குளிக்க சென்ற இலக்கியா, ஸ்வேதா மற்றும் முருக லட்சுமி உள்ளிட்ட ஐந்து பெண்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

 

இலக்கியா கண்ணியம்மாள் ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon