மூதாட்டியை தாக்கிய கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்..!
தென்காசி அருகே வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியை திடீரென கரடி தாக்கியதில் காயமடைந்தார். தென்காசி மாவட்ட கல்யாணி புரம் பகுதியில் சேர்ந்த ராசம்மாள் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த வீட்டின் புதரில் பதுங்கி இருந்த கரடி ஒன்று அவர் மீது பாய்ந்து அவரை தாக்கியது. அதில் காயம் அடைந்தவர் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்து கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





