இயக்குநர் சீனுராமசாமி படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்
சீனுராமசாமி இயக்கத்தில் குணசித்திர வேடத்தில் யோகிபாபு நடித்த ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படம் திரைக்கு வந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது தெரிந்ததே. இப்படத்திற்கு தற்போது இன்னொரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதாவது, ஸ்பெயின் பாரம்பரிய ஜிரோனா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படவுள்ளது. இந்த விழாவில் திரையிட தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




