சொந்த ஊருக்கு கிளம்பிய மக்களுக்கு செக் வைத்த அதிகாரிகள்..!
தொடர் விடுமுறையை ஒட்டி இசிஆர் சாலையில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சோளிங்கநல்லூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி சோழிங்கநல்லூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் யுவராஜ் தலைமையில் ஆன அதிகாரிகள் உத்துண்டி சுங்கச்சாவடிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கேட்டிருந்தனர். அப்பொழுது விதிமுறையை மீறி சென்ற ஆம்னி பேருந்துகளுக்கும் அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களுக்கும் அபராதம் பிடித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





