முதலமைச்சர் கோப்பை போட்டி ஒரு தலைப்பட்சமாக இருந்ததாக குற்றச்சாட்டு..!

துரையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை இறுதிப்போட்டியின் நடுவே இரு அணியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கோகோ இறுதி போட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

 

கோவை – சென்னை அணிகள் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது நடுவர்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி கோவை அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இரு அணி வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட மோதலில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதலிடத்தை பிடித்த சென்னை அணியினர் பரிசுகளை பெற்ற பொழுது கோவை மகளிர் அணியை சேர்ந்த வீராங்கனைகள் முழக்கங்களை எழுப்பியதால் குழப்பம் ஏற்பட்டது.