--- --:--:-- --

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்..!

1

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம்பிடித்த விசிக நிர்வாகி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இவர், திங்கட்கிழமை இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது, கோயிலில் தீட்சிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடியதாக சொல்லப்படுகிறது. அதைப் பார்த்த இளையராஜா, தனது செல்போனில் படம் பிடித்தபோது தீட்சிதர்கள் சிலர் செல்போனைப் பறித்து அவரை திட்டி, தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

 

அதில், காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளையராஜா, பின்னர் சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

 

தீட்சிதர்களை கைது செய்யக் கோரி விசிக-வினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், தீட்சிதர்கள் 5 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon