--- --:--:-- --

இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவை முன்னிட்டு ஆதார் சிறப்பு முகாம்..!

11

ந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவை முன்னிட்டு ஆதார் சிறப்பு முகாம் திலகர் நகர், ரேஷன் கடை வீதியில் உள்ள அன்னை பிதா இல்ல வளாகத்தில் நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. தொடக்க விழாவான நேற்று ( 8ந் தேதி) நடந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகராட்சி 11 வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

 

ஊர் பிரமுகர்கள் வெங்கடேஷ், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திலகர் நகர் ஊர் கமிட்டி தலைவர் பொன்னுச்சாமி முகாமை தொடக்கி வைத்தார். முகாமில் திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் மேற்பார்வையில் திருப்பூர் வடக்கு அஞ்சல் ஆய்வாளர் ரஞ்சித்குமார் தலைமையில் 5 அஞ்சலக ஊழியர்கள் சரியான ஆவணங்களுடன் வந்தவர்களுக்கு ஆதார் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

முகாமில் புதிய ஆதார் கார்டு பதிவு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புதிய போட்டோ மாற்றிக் கொடுப்பது, முகவரி மாற்றம், பெயர் திருத்தம், மொபைல் எண் மாற்றம், கருவிழி , கைரேகை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் செய்யப்பட்டது.

 

அதே போல் அஞ்சலக சிறு சேமிப்பு துவங்க சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. முகாமிற்கான ஏற்பாடுகள ஊர் பிரமுகர்கள் ஐயம்பெருமாள், சண்முகம், ரமேஷ், பழனிச்சாமி, சதீஷ் குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon