--- --:--:-- --

திருப்பூரில் வேனும், காரும் மோதி விபத்து..4 பேர் உயிரிழப்பு..!

2

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். கருப்பசாமி புதூர் பகுதியில் நான்கு வழிச்சாலையில் உள்ள பாலப்பகுதியில் கார் சென்ற பொழுது எதிரே வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதி உள்ளது.

 

அதில் பயணம் செய்த 11 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இரண்டு பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு ஊரு திரும்பிக் கொண்டிருந்த பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

 

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 12 பேர் காயம் அடைந்துள்ளனர். புதிய நான்கு வழிச்சாலையில் பணிகள் நடைபெறுவதால் ஒரே பாதையில் எதிரெதிரே இரு வாகனங்களும் சென்றதால் இந்த விபத்து நடைபெற்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon