ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நோயாளிகளை அவசர கதியில் வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு ஈமெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நோயாளிகளை அவசர கதியில் வெளியேற்றினர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மருத்துவக் கல்லூரி செவிலியர் கல்லூரி நிர்வாக அலுவலகம் புற நோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவமனை என பல்வேறு பிரிவுகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு நோயாளிகள் மற்றும் மக்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





