அம்மாபாளையம், நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்..!
அம்மாபாளையம், நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் பூண்டி எஸ்.எஸ்.ஐ தனலட்சுமி விளக்கி பேசினார்.
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சியில் அம்மாபாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்காக பள்ளி மேலாண்மை குழு (எஸ்.எம்.சி ) சார்பில் போக்சோ சட்டமும், வருமுன் தவிர்க்க கையாளும் வழி குறித்த விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி வரவேற்றார். விழிப்புணர்வு முகாமில் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய சட்டம் – ஒழுங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்தும், பிற ஆண்களிடம் நாம் நடந்து கொள்ளும் முறை குறித்தும், தவறு நடந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், தவறு நடக்காமல் வருமுன் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் நாட்டில் நடந்த பல்வேறு சம்பவங்களை எடுத்து கூறி விளக்கி பேசினார்.
மேலும் மாணவிகள் தங்களுக்குள் ஏற்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். முடிவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சஃபியுல்லா நன்றி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




