லாரியும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து..!
நெல்லையில் லாரியும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜா புதுக்களி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் மாமியாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை எதிரே வந்த லாரியும் இருசக்கர வாகனமும் மோதின. இதில் தூக்கி வீசப்பட்டவர் நிகழ்விடத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்தனர்.
அவர்கள் உடல்களை மீட்ட காவல்துறையினர் ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இனிவரும் காலத்தில் விபத்து நடப்பதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





