--- --:--:-- --

விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா..ஒருவர் தொட்டு பேசியதால் கோபமடைந்த ஜீவா..!

3

பெரும் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பி இருக்கிறார் நடிகர் ஜீவா. சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த நடிகர் ஜீவா கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

 

திடீரென ஒருவர் பைக்கில் குறுக்கே வந்ததாகவும் அவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பி அதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக ஜீவா உயிர் தப்பிய நிலையில் காருக்குள் அவர் மனைவி சிக்கிக் கொண்டதாக தகவல் பரவ பதற்றம் கூடியிருக்கிறது.

 

ஆனால் காருக்குள் ஜீவாவின் மனைவி இல்லை தன் மேலாளர் உடன் ஜீவா பயணித்து தெரிய வர இருவரையும் பொது மக்கள் பத்திரமாக மீட்டு இருக்கின்றனர்.

 

இந்த பரபரப்புக்கு இடையில் நிலைமை புரியாமல் லூஸ் டாக் விட்ட ஒருவர் ஜீவாவை தொட்டு பேச சட்டென கோபமடைந்த ஜீவா ஆத்திரத்தில் தன்னை வீடியோ எடுத்தவரின் செல்போனை பறிக்க முயன்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon