--- --:--:-- --

லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..3 வயது குழந்தை பலி..!

2

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த மூன்று வயது குழந்தை உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த யாசர் அராபத் என்பவர் தனது உறவினர்களில் நான்கு பேருடன் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் சிதம்பரம் அருகே ஆணையம் குப்பம் எனும் இடத்திற்கு வரும்பொழுது கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்ததால் கார் மீது நேருக்கு நேர் மோதியது.

 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon