--- --:--:-- --

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடி..!

6

சென்னை அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து சென்ற காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

 

அவர்கள் கொடுத்த தகவலின் படி வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்து வந்த விஜய் என்ற நபரின் வீடியோ சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த 300 வலி நிவாரணி மாத்திரைகள், 200 கிராம் கஞ்சா, 36,000 பணம், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

விசாரணையில் அவர் திருவண்ணாமலையை சேர்ந்த விஜய் என்பதும் விபத்து காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. காதலி ஜாஸ்மினுக்கும் தொடர்பு இருப்பதால் அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon