--- --:--:-- --

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..!

9

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒன்பதாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு பகுதியான கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது.

 

இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 9 நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon