--- --:--:-- --

போட்டோ எடுத்தவர்களை மிரட்டிய கரடி..!

10

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புகைப்படம் எடுக்க முயன்றவர்களை ஆக்ரோஷத்துடன் எழுந்து நின்று விரட்டிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரியில் சாலையின் தூரத்தில் கரடி ஒன்று உலா வந்து கொண்டிருந்தது. அதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்தனர்.

 

அப்பொழுது அந்த கரடி ஆக்ரோஷத்துடன் எழுந்து நின்று அவர்களை மிரட்டியதால் அச்சம் அடைந்த பயணிகள் கார் கண்ணாடியை அடைத்து கொண்டு புறப்பட்டனர். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon