--- --:--:-- --

கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் இன்ஸ்டா பதிவு வைரல்..!

6

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூரியகுமார் யாதவ் வெளியிட்ட பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் உங்கள் மகள்களை பாதுகாப்பதற்கு பதிலாக உங்கள் மகன், சகோதரர்கள், தந்தை, கணவன், நண்பர்களுக்கு முதல் கற்பியங்கள் என குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அதை வைத்து பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

அனைவருக்கும் அறிவுரை வழங்கும் வகையில் சூரிய குமார் யாதவ் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon