--- --:--:-- --

பச்சை குத்த மறுத்ததால் சரமாரி தாக்குதல் நடத்திய கும்பல்..!

5

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா வந்தவர்களை பச்சை குத்த சொல்லி கட்டாயப்படுத்திய ஒரு கும்பல் பச்சை குத்த மறுத்ததால் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளது.

 

சிவகாசி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பாபநாசம் சென்று உறவினர்களுக்கு திதி கொடுத்துவிட்டு குளிப்பதற்காக குற்றாலம் சென்றனர். அவர்களில் மருதமுத்து என்பவரை குற்றாலநாதர் கோயில் அருகே பச்சை குத்திக் கொள்ளுமாறு சிலர் அழைத்துள்ளனர்.

 

அவர் வேண்டாம் என்று மறுக்கவே ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலை தடுக்க முயன்ற மருதமுத்துவின் சகோதரியையும் அவர் தாக்கியதில் அவருக்கு தலையில் 7 தையல் போடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon